சென்னை: சென்னை போரூரில் தனியாருக்குச் சொந்தமான செல்போன்கள் பழுது பார்க்கும் கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, நேற்று(ஏப்.12) வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய செல்போனைப் பழுது பார்ப்பதற்காக அந்த கடைக்குக் கொண்டு வந்தார்.
அப்போது கடையின் உரிமையாளர் வாடிக்கையாளர் செல்போனைப் பழுது பார்ப்பதற்காக செல்போனின் பேட்டரியை எடுக்க முயன்ற போது, பேட்டரியில் இருந்து அதிகப்படியான புகை வெளியேறியது. அடுத்த சில வினாடிகளில் அந்த செல்போனின் பேட்டரி வெடித்துச் சிதறியது.