ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மண் வளம் நன்றாக உள்ளதால் விவசாயிகள் பணப்பயிரான வாழை, கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். 12 மாதப்பயிரான வாழைகள் குறிப்பாக, நேந்திரம் கேரளாவில் அதிகளவில் விற்யானையாவதால் இப்பகுதிகளில் குவின்டால் நேந்திரம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
அந்த வகையில், தாளவாடி, சத்தியமங்கலத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பரப்பளவு உள்ளது. இதில், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், ஒணம் பண்டிகையை எதிர்ப்பார்த்து நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த வாழை மரங்கள் முழுவதும் அறுவடைக்குத் தயாராக இருந்துள்ளது.
இந்நிலையில், சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக, சிவியார் பாளையத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 30க்கு மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்த ரூ.2 கோடி மதிப்பிலான 25 ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளது. இதனால், இப்பகுதிவிவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.