சென்னை:வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை மாநகரில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. பெரம்பூர், கொளத்தூர், அயப்பாக்கம் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நள்ளிரவு 12 மணிம இன்று நண்பகல் 12 மணி வரை பெய்துள்ள மழையின் அளவு மண்டல வாரியாக மழையின் அளவு(மில்லி மீட்டரில்) வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து சராசரியாக 99.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழை அளவு விவரம் பின் வருமாறு;
திருவொற்றியூர் மண்டலம்
கத்திவாக்கம்-118.2
திருவொற்றியூர்-99.0
மணலி மண்டலம்
நியூ மணலி டவுண்-128.7
மணலி-85.2
மாதவரம் மண்டலம்
மாதவரம்-97.2
புழல்-86.4
தண்டையார்பேட்டை மண்டலம்
தண்டையார் பேட்டை-107.7
ராயபுரம் மண்டலம்
சென்னை சென்ட்ரல்-80.7
பேசின் பிரிட்ஜ்-112.2
திருவிக நகர் மண்டலம்
கொளத்தூர்-158.1
பெரம்பூர்-165.3
அம்பத்தூர் மண்டலம்
அயப்பாக்கம்-150.9
அம்பத்தூர்-129.6
அண்ணாநகர் மண்டலம்
அமைந்தக்கரை-114.9