தேனி:போடி வக்கீல் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தன பாண்டியன் திருச்செந்தூரில் உள்ள கள்ளக் காதலியின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தேனியைச் சேர்ந்த சந்தன பாண்டி என்பவருக்கும் வழக்கறிஞர் சுரேஷ் என்பவருக்கும் நிலம் விற்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் போடி சுப்புராஜ் நகர் சிட்னி மைதானம் அருகாமையில் நடை பயிற்சி மேற்கொண்ட வழக்கறிஞர் சுரேஷை நான்கு பேர் கடத்திச் சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போடி நகர் காவல் ஆய்வாளர் கேத்ரின் மேரி தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் வாகனத்தை வழிமறித்து வக்கீல் சுரேஷை மீட்டு கடத்தலில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்தனர்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "பொட்டிப்புரம் நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அம்மரப்பர் மலை அருகே 130 ஏக்கர் நிலம் மகாராஷ்டிராவை சேர்ந்த அஜய் சோப்ரா என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு மேனேஜராக வக்கீல் சுரேஷ் இருந்து வந்துள்ளார். இந்த நிலத்தை சந்தன பாண்டியனுக்கு விற்பனை செய்வதாக வக்கீல் சுரேஷ் கூறியுள்ளார். அதனை நம்பி சுரேஷிடம் சந்தன பாண்டி ரூ.5 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அதே நிலத்தை சுருளிப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கு அஜய் சோப்புரா மேனேஜர் வக்கீல் சுரேஷ் மூலம் விற்பனை செய்வதற்கு அட்வான்ஸ் பெற்றதாக தெரிகிறது.