தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி பண்ணை வீட்டில் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்.. - Ilayaraja farmhouse in theni

Ilayaraja Daughter Bhavatharini: தேனி மாவட்டத்தில் உள்ள இசைஞானி இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது மகள் உடலை நல்லடக்கம் செய்வதற்காக முன்னேற்பாட்டுப் பணிகளைத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Ilayaraja Daughter Bhavatharini
Ilayaraja Daughter Bhavatharini

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 9:15 PM IST

Updated : Jan 26, 2024, 10:43 PM IST

Ilayaraja Daughter Bhavatharini

தேனி:இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.25) உயிரிழந்தார். பிரபல பின்னணி பாடகி பவதாரிணி கடந்த 2000 ஆம் ஆண்டில் பாரதி திரைப்படத்தில் "மயில் போல பொண்ணு ஒண்ணு" என்ற பாடலை பாடியதற்காகச் சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதைப் பெற்றிருந்தார்.

மேலும் பிரண்ட்ஸ், தாமிரபரணி, காதலுக்கு மரியாதை, மங்காத்தா, கோவா, அனேகன் ஆகிய பல படங்களில் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவையாகும். குறிப்பாக அழகி படத்தில் இவர் பாடிய "ஒளியிலே தெரிவது தேவதையா" என்ற பாடல் மாபெரும் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பவதாரிணியின் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இளையராஜாவிற்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உடலை நல்லடக்கம் செய்வதற்காகப் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட நல்லடக்கத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்பாக அவரது சொந்த பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரை நல்லடக்கம் செய்து மணிமண்டபங்களைக் கட்டி உள்ளனர். தற்பொழுது தனது மகளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு இசையமைப்பாளர் இளையராஜா அங்கு முன்னேற்பாட்டுப் பணிகளைச் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவு: அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

Last Updated : Jan 26, 2024, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details