திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் இயக்குநராக விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற குரூப் கேப்டன் ஜி.எஸ்.வொக்ரா பொறுப்பேற்றுக் கொண்டார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ஜி.எஸ்.வொக்ரா கூறுகையில்,
"பள்ளிகளின் தரத்தை பன்மடங்கு உயரத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் இராணுவத்தின் கீழ் உள்ள பள்ளிகளின் ஆலோசகராகவும், கனடா மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஊத்துக்குளி பகுதியில் உள்ள இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பொறுப்பேற்றுக் கொண்டதற்கான காரணம், நகரப் பகுதிகளில் மாணவர்களுக்கு பல்வேறு விவரங்களை தெரிவிக்க வழிகாட்டிகள் இருக்கின்றனர். ஆனால் ஊரக மற்றும் கிராமப் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் வழங்குவதற்காக இப்பள்ளியை தேர்ந்தெடுத்து பணியாற்ற உள்ளேன் என்றார்.
தொடர்ந்து பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்துவது தனது முதல் பணி எனவும் அதற்கேற்ற வகையில் விரிவான வகுப்பறை ஆய்வுக்கூடம் கணினி கூடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தை கற்றுத் தர இருப்பதாகவும் தெரிவித்தார்.