ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலக கட்டுமான பணிகளை அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் வந்து அடிக்கல் நாட்டை துவங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், "மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றியை தக்க வைத்துள்ளது. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்கள் தான். அதேசமயம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அர்ஜுன் சம்பத் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதற்கு காரணம் வோட்-ஜிகாத். வங்கதேசத்தில் இருந்து காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நக்சல்களை ஊடுருவ வைத்து, வாக்காளர்களாக மாற்றி சதிவேலையில் ஈடுபட்டதால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சதியை மத்திய ஆளும் அரசு முறியடிக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்:தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?
அதன் தொடர்ச்சியா பேசிய அவர், "தமிழகத்தில் 2026 தேர்தலை பொறுத்த வரையில், திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் என 5 முனை போட்டி உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா, போதைப்பொருள் ஆகியவற்றால் திமுக ஆட்சியில் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களம் திராவிட மாடலா? அல்லது தேசிய மாடலா? என்பது தான். மேலும், தமிழகத்தில் மருத்துவர், ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்கள் என அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது" என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "பாடகி இசைவாணி சமீபத்தில் ஐயப்ப சுவாமியை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல ஐயப்பன் சுவாமி சமத்துவ சாமி என குறிப்பிட்ட அவர் இந்த பாடலின் வாயிலாக ஐயப்பன் சுவாமியை வணங்கும் பலரின் மனதை புண்படுத்தியுள்ளார்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்