தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்திலே தாலி கட்டி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு.. இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - Youth sexually assaulted minor girl - YOUTH SEXUALLY ASSAULTED MINOR GIRL

Pocso act judgement: 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் நீதிமன்றம் மற்றும் விக்னேஷ் குமார் புகைப்படம்
அரியலூர் நீதிமன்றம் மற்றும் விக்னேஷ் குமார் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 5:19 PM IST

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (30). இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்ததால், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது, 14 வயது சிறுமியை ஆரணிக்கு கடத்திச் சென்று, பேருந்திலேயே தாலியும் கட்டி உள்ளார். மேலும், பலமுறை சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் குமாருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விக்னேஷ் குமார் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க:“பெண் காவலர்கள் தாக்கினார்களா?”.. நீதிமன்றத்தில் முறையிட்ட சவுக்கு சங்கர்! - Savukku Shankar Assaulted

ABOUT THE AUTHOR

...view details