சென்னை: இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், சில நகரங்கள் மட்டும், தங்கள் சுத்தமான காற்றின் தரத்தால் மக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளன. டெல்லி மற்றும் பிற பெருநகரங்கள் அபாயகரமான அளவு காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் அதே வேளையில், சில நகரங்கள் சாதகமான புவியியல் அமைப்பு மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் கொள்கைகள் வாயிலாக குறைந்த காற்று மாசு குறியீடு (AQI) அளவுகளை பராமரித்து வருகின்றன.
இந்தப் பட்டியலில், நவம்பர் 11 நிலவரப்படி, தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், 25 எனும் காற்று மாசு குறியீடு அளவுடன் முதன்மையானதாக இருந்தது. இது இந்தியாவின் மிகக் குறைந்த காற்று மாசுக் குறியீடு அளவுகளில் ஒன்றாகும். அரியலூரின் கடலோரப் பகுதிகள் மற்றும் பசுமையான சூழல் இந்த சாதனைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி இருக்கின்றன. புவியியல் அம்சங்கள் காற்றின் தரத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
இதேபோல், சிலோங் (மேகாலயா), ஐஸ்வால் (மிசோரம்) போன்ற பிற தென்னிந்திய நகரங்களும் சுமார் 25 காற்று மாசு அளவுகளைப் பதிவு செய்து தங்கள் சூழலின் சிறப்பை பிரதிபலித்துள்ளன. இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் குறைந்த தொழிற்சாலை கார்பன் உமிழ்வுகள் காரணமாக மிசோரமில் உள்ள ஐஸ்வால் 32 அளவுடன் தங்களின் சுத்தமான காற்றின் நிலையை வெளிப்படுத்தியுள்ளது.