அரியலூர்:அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் தற்காலிக பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் சந்திப்பு (CREDITS- ETV BHARAT TAMIL NADU) இந்த போராட்டத்தில் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வன் மீது பல்வேறு குற்ச்சாட்டுகள் மற்றும் பல்வேறு புகார்கள் தற்காலிக பேராசிரியர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், “தற்காலிக பேராசிரியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணி நீட்டிப்பு கடித்தை தற்போது வழங்க பல விதங்களில் கல்லூரி முதல்வர் தடையாக இருப்பதாகவும், இதற்கு காரணம் தற்காலிக பேராசிரியர்கள் மீது முதல்வர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சிதான்.
இதேபோல், தற்காலிக பேராசிரியர்களுக்கு எதிராக இந்த கல்லூரியில் பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலமுறை அரியலூர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், உறுப்பு கல்லூரி இயக்குனரிடம் புகார் அளித்தும் எந்த வித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, இதுகுறித்து உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், கல்லூரி முதல்வரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கல்லூரியின் தற்காலிக பேராசிரியர்கள், நிரந்தர பேராசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர்.
போராட்டம் குறித்து தற்காலிக பேராசிரியர் மதியழகன் கூறுகையில், “கல்லூரியில் பணிபுரியும் 5 தற்காலிக பேராசிரியரின் பணிநீட்டிப்பு நியமன ஆணை வழங்கபடவில்லை. இதற்கு காரணம் கல்லூரி முதல்வரின் காழ்ப்புணர்ச்சிதான். எங்களை கல்லூரி வளாகத்திற்குள் செய்தியாளரைக்கூட சந்திக்க விடவில்லை. எங்களுக்கு பணியிடத்தில் எந்த வித பாதுகாப்பும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஒரு தீர்வை தமிழக முதல்வரும், உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைகழக துணைவேந்தரும் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாங்கள் 60 பேரும் இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:திருச்சி காந்தி சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது" - ஆட்சியரிடம் எஸ்டிபிஐ மனு! -