ஆரணி: ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 5,00,099 வாக்குகள் பெற்று 2,08,766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2,91,333 வாக்குகளும், பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 2,36,571 வாக்குகளும், நாதக வேட்பாளர் பாக்கியாலட்சுமி 66740 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவினர்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி பெயர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|
1. | தரணிவேந்தன் (வெற்றி) | திமுக | 5,00,099 |
2. | கஜேந்திரன் | அதிமுக | 2,91,333 |
3. | கணேஷ்குமார் | பாமக | 2,36,571 |
4. | பாக்கியலட்சுமி | நாதக | 66,740 |
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், பாமக சார்பில் கணேஷ்குமார், நாதக சார்பில் பாக்யலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் ஆரணி தொகுதியில் மொத்தம் 11,33,520 (75.76%) வாக்குகள் பதிவாகின.