சென்னை : சென்னை சாலிகிராமம் எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எழில்குமார். இவர் தற்போது வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பை கடந்த 2022ம் ஆண்டு இரண்டாம் தரமாக விலைக்கு வாங்கியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பத்திரத்தில், தரைதளத்தில் உள்ள 2 கார் பார்க்கிங்கில் ஒன்று எழில்குமாருக்கு சொந்தம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தரைதளத்தில் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் அருண்குமார் என்பவர் அங்கு தனது காரை நிறுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய எழில்குமார், கடந்த ஒரு வருடமாக எனது வீடு காலியாக இருந்ததால் நீங்கள் எனது வீட்டிற்கான பார்க்கிங்கில் உங்களது காரை நிறுத்தினீர்கள். தற்போது வீட்டின் உரிமையாளராக நான் வந்திருப்பதால் இனிமேல் எனது காரை நான் நிறுத்திக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். அதற்கு அருண்குமார் ஒப்புக்கொள்ளாததால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க :கோவை ரேக்ளா பந்தயத்தின் போது நிகழ்ந்த விபத்தில் வைரல் வீடியோ!