விழுப்புரம்:திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியின் 11 மற்றும் 12ஆம் பட்டமளிப்பு விழா மார்ச் 22 வெள்ளிக்கிழமை காலை 10:20 மணியளவில், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் குழுத்தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் தலைமையேற்றனர். கல்லூரி முதல்வர் முனைவர் மா.வீரமுத்து வரவேற்புரை வழங்கினார். விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் ஐசரி கணேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில், 2018 - 2021ஆம் கல்வியாண்டில் பயின்ற 293 மாணவ, மாணவியர்கள் மற்றும் 2019 - 2022ஆம் கல்வியாண்டில் பயின்ற 242 மாணவ, மாணவியர்களும் சேர்த்து, 510 இளங்கலை பட்டமும், 25 முதுகலை பட்டமும் என மொத்தம் 535 பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில், 339 ஆண்களும் மற்றும் 196 பெண்களும் பட்டங்களைப் பெற்றனர்.
விழா மேடையில் பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ், "பட்டம் பெறக்கூடிய மாணவர்கள் நாளைய உலகின் தூண்கள். ஆகையால், மாணவர்கள் மேலும் பல பட்டங்களைப் பெற்று, நாட்டை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். புகை, மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ஐயா(மருத்துவர் ராமதாஸ்) வழியில் செயல்பட வேண்டும்.