வேலூர்: ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று மாலை ராணிப்பேட்டை முத்துகடையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சோளிங்கர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், "கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கட்சி நிர்வாகியை சந்திக்க சென்ற மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. ராணிப்பேட்டை மாவட்டம் பிரித்த பிறகும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. குறிப்பாக மருத்துவ கல்லூரி இல்லை அதேபோல் பனப்பாக்கத்தில் டாட்டா நிறுவனம் அமைக்க விலை நிலங்கள் எடுக்கப்பட்டது. அப்படி எடுக்கப்படும் பொழுது உள்ளூர் வாசிகளுக்கு 80% சதவீதம் வரை வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்படி உள்ளூர் வாசிகளுக்கு வேலை இல்லை என்றால் எந்த நிறுவனமும் உள்ளே வர வேண்டாம்.
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:"விஜயின் கட்சி கொள்கை மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் அவரது கட்சியின் வளர்ச்சிகானதாக இருக்க வேண்டும்"- ஜி.கே வாசன் அறிவுறுத்தல்!
பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சாதிவாரி கணக்கெடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதோடு சாதிவாரி கணக்கெடுத்து விட்டால் தொகுதி சீட்டு ஒதுக்க சிக்கல் வரும் என பயந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.
மேலும், சாதிவாரி கணக்கு எடுக்கப்பட்டால் மட்டுமே எந்த சமூகம் வளர்ந்துள்ளது என தெரிய வரும். அப்பொழுதுதான் சமூக நீதி உருவாக்க முடியும். அதேபோல, 2026-ல் அனைத்து கட்சிகள் வரக்கூடிய கூட்டணி ஆட்சி நடக்கும் அதில் ஆட்சி அதிகார பகிர்வு இருக்கும். பாமக-வும் அந்த கூட்டணி ஆட்சியில் இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, "கோவையில் செந்தில் பாலாஜி குறித்து பெருமையாக பேசிய முதல்வர் இதே ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் செந்தில் பாலாஜி என்று மேடையில் பேசி இருக்கிறார். இப்பொழுது செந்தில் பாலாஜி ஒரு ஆண்டு காலம் சிறையில் இருந்து தான் வந்திருக்கிறார். அதுவும் தற்போது பிணையில் தான் வெளியே வந்திருக்கிறார் என்பதை முதல்வர் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்