சென்னை:கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதுடைய இவர் சென்னை தியாகராய நகரில் தங்கி, கடந்த ஒரு வருடங்களாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்வமணி (29) என்பவரும், வர்ஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இவ்விருவரும் திருமணம் செய்யமாலேயே நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படும் நிலையில், வர்ஷா கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷாவிற்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வர்ஷா தனக்குத்தானே பிரசவம் பார்த்து, குழந்தையின் இரு கால்களையும் வர்ஷாவே வெட்டி எடுத்துள்ளதாகவ; இதனால், குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.