தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மாந்திரீகம்.. சென்னை ஓட்டேரி பகுதியில் அதிர்ச்சி சம்பவம்! - witchcraft in crematorium - WITCHCRAFT IN CREMATORIUM

chennai crime: ஓட்டேரி இடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணத்தின் குழியில் சட்ட விரோதமாக மாந்திரீகத்தில் ஈடுபட்டவர்களை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதி லட்சுமி புதைக்கப்பட்ட இடம்
ஜோதி லட்சுமி புதைக்கப்பட்ட இடம் (credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 4:55 PM IST

சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (82). இவருடைய மனைவி ஜோதி லட்சுமி என்பவர் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 10ம் தேதி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து அன்றைய தினமே ஜோதி லட்சுமியின் உடல் ஓட்டேரி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை பதினாறாம் நாள் காரியம் செய்வதற்காக கல்யாண சுந்தரம் இடுகாட்டுக்கு சென்றார். அப்போது, சுடுகாட்டில் ஜோதி லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் பன்றி, கோழி உள்ளிட்ட உயிரினங்களை பலியிட்டு யாரோ மாந்திரீகம் செய்திருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் இடுகாட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க:"கள்ளக்குறிச்சி விவாகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார்" - பாமகவுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் சவால்!

அதில், வாட்ச்மேன் தாமோதரன் மற்றும் குழி தோண்டும் வேலை பார்க்கும் ராஜேஷ் ஆகியோர் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு, நான்கு சக்கர வாகனத்தில் வந்த சுமார் ஏழு பேரை மாந்திரீகம் செய்வதற்காக அனுமதித்திருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் பன்றி, கோழியை பலியிட்டு அதன் ரத்தத்தை ஜோதி லட்சுமியின் புதைக்கப்பட்ட இடத்தில் தெளித்து மாந்திரீகம் செய்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் இருவரிடமும் மாந்திரீகம் செய்தவர்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் இடுகாட்டில் பிணத்தை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ கூடாது என கட்டுப்பாடு உள்ள நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்களை இடுகாட்டுக்குள் அனுமதித்து மாந்திரீகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த ஜோதி லட்சுமியின் உடல் அருகே பன்றி, கோழி உள்ளிட்ட உயிரினங்களை வைத்து மாந்திரீகம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாய், தம்பியை கொன்று கோணி பையில் கட்டிய மகன்.. சென்னையில் இரட்டைக் கொலை!

ABOUT THE AUTHOR

...view details