சென்னை: தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பொதுமக்களுக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் ஆகியவை நினைவுக்கு வந்தாலும், மறுபுறம் பணி மற்றும் கல்வி போன்ற காரணங்களால் வெவ்வேறு ஊர்களில் தங்கியிருப்பவர்கள் தீபாவளி விடுமுறைக்கு அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படியில், ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரயில், பேருந்து உள்ளிட்டவைகள் மூலம் பயணித்து வருகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லுவோருக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதிலும் குறிப்பாக இந்த ஆண்டு தமிழக அரசு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில், தீபாவளிக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி சென்னை- பெங்களூர், கொச்சி- பெங்களூர், கவுகாத்தி-அகர்தலா, விஜயவாடா-ஹைதராபாத் உள்ளிட்ட சில வழித்தடங்களில் சலுகை பயண கட்டணங்களை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!