தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருந்து புவனேஸ்வர், பக்டோரா, திருவனந்தபுரத்திற்கு புதிய விமான சேவை - Air India Express - AIR INDIA EXPRESS

Air India Express: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் புதிதாக மூன்று புறப்பாடு மூன்று வருகை விமான சேவைகளை நேற்று (ஆக 13) முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து தொடங்கி உள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 10:01 AM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் புதிதாக மூன்று புறப்பாடு மூன்று வருகை விமான சேவைகளை நேற்று (ஆக.13) முதல் தொடங்கி உள்ளது. அதன்படி, சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் நான்கில் இருந்து தினமும் காலை 7.45 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் காலை 9.30 மணிக்கு ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் சென்றடைகிறது.

அதன்பின்பு அதே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 10 மணிக்கு புவனேஸ்வரிலிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது. அதன்பின்பு பகல் 12.35 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 3.10 மணிக்கு மேற்குவங்க மாநிலம், பக்டோரா சென்றடைகிறது. பின்பு அதே விமானம் மாலை 3.40 மணிக்கு, பக்டோரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.15 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.

அதன் பின்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு கேரளா மாநிலம், திருவனந்தபுரம் சென்றடைகிறது. பின்பு அதே விமானம் இரவு 8.50 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு சென்னை வந்து சேர்கிறது.

இந்நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து ஒரே நாளில் புதிதாக 3 புறப்பாடு விமான சேவைகள் , 3 வருகை விமான சேவைகள் என மொத்தம் 6 புதிய விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தாய்லாந்து டூ சென்னை; விமானத்தில் கடத்தி வரப்பட்ட விலங்குகள்..வளைத்துப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்! - Smuggled animals from Thailand

ABOUT THE AUTHOR

...view details