தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அதிமுக அரசின் திட்டங்களுக்கே திமுக திறப்பு விழா" - உக்கடம் பாலத்தை பார்வையிட்ட பிறகு எஸ்.பி.வேலுமணி சாடல் - SP VELUMANI

SP Velumani On Ukkadam-Athupalam Flyover: கோவையில் உக்கடம் - ஆத்துப்பாலம் பகுதியில் திறக்கப்பட்ட மேம்பாலத்தை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி காரில் பயணித்தபடி பார்வையிட்டார்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 7:11 PM IST

கோயம்புத்தூர்:உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் ரூ.481 கோடி மதிப்பில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி காரில் பயணித்தபடி பார்வையிட்டார். அப்போது பாலக்காடு சாலை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மின் மையானதிற்கு அருகில், அவரைத் அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் பின் தொடர்ந்தனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும் இந்நிகழ்வினை தொடர்ந்து, இந்த பாலம் பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்து, திறக்கப்பட்டது என கூறி அதிமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதற்குபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோவை மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கனவு திட்டமான உக்கடம் - ஆத்துப்பாலம் பகுதியில் திறக்கப்பட்ட மேம்பாலம் . இது இனி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உதவும். இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக, இருந்த எடப்பாடி பழனிச்சாமியால், 216 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, இந்த மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் 2021-ஆம் ஆண்டு இந்த கட்டுமான பணிகளுக்காக கூடுதலாக 265.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் 481.44 கோடி மதிப்பில் இந்த திட்டத்தில் இந்த மேம்பாலத்தை அமைத்து, தந்த முன்னாள் முதலாமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

அதனைத் தொடர்ந்து அவர் இந்த திட்டத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்ததை குறிப்பிட்டு, சுங்கம் சாலையில் பணிகள் முடிவு பெறாமல் இருப்பதையும் சுட்டி காட்டினார். பின் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியதை குறிபிட்ட அவர் இந்த மேம்பால பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்திருக்கலாம் ஆனால் மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டும், இன்றும் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதாக விமர்சித்தார்.

மேலும் இந்த பணிகளை மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் விரைந்து, இந்த பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்தார். கோவை மாவட்டத்திற்கு திமுக எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து வருவதாக தெரிவித்தார்.

பின் அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து குளங்களிலும், நீர் நிரப்ப வேண்டும் எனவும் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திலும் முழுமையாக தண்ணீர் மக்களுக்குச் சென்றடையவில்லை அதுகுறித்து ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பினர். அதை தொடர்ந்து, அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும், விரைந்து முடிக்க வேண்டும், பின் விமான நிலைய விரிவாக்கத்தையும், அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும், அவ்வாறு செய்தால் தான் பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்லும், தொழில் உற்பத்தி, கட்டமைப்புகள் பெருகும் என்றார்.

அதேபோல் வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளையும், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட குளங்கள் பராமரிப்பு திட்டங்களையும் உடனடியாக செய்து தர வேண்டும். அவ்வாறு செய்து, தந்த நிலையில், அதை மாநகராட்சி நிர்வாகம் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோவை அரசு மருத்துவமனை சுத்தமில்லாமல் இருக்கிறது, அதை சுத்தப்படுத்தி, பராமரித்தால்தான் அதன்மூலம் ஏற்படும் நோய்களை தவிர்க்க முடியும். அதேபோல் இந்த மேம்பாலத்தில் அறிவிப்பு பலகைகள் எச்சரிக்கை பலகைகளை எல்லாம் வைத்து, விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது ஆத்துப்பாலம் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு, அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின் ஆதிமுகவினர் உக்கடம் பகுதியில் பட்டாசுகளை வெடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:உக்கடம் மேம்பாலம் திறப்பு; எவ்வளவு கிலோமீட்டர் நீளம் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details