தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய் வராது” - நடிகை சரண்யா பொன்வண்ணன்! - Saranya Ponvannan - SARANYA PONVANNAN

Saranya Ponvannan: பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன்
நடிகை சரண்யா பொன்வண்ணன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 10:11 PM IST

சென்னை:தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை தாய்மார்களுக்கு உணர்த்தும் விதமாக, உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரையில் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆதரித்தல், ஊக்குவித்தல், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அனைத்து இடங்களிலும் மேம்படுத்துவது இந்த வாரத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகை சரண்யா பொன்வண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தனக்கு ஏற்பட்ட மகப்பேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து சரண்யா பொன்வண்ணன் பேசியதாவது, “உலக தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது பெருமையாக உள்ளது. உலகத் தாய்மார்கள் அனைவருக்கும் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைப்பதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி. தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் முன்பு குறைந்திருந்தாலும், தற்போது அவை அதிகரித்துள்ளது.

அனைவருக்கும் தாய்ப்பாலின் அருமை தெரிந்துள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சி அடைகிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக ,தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான தாய்ப்பால் உருவாகிறது. அதனை தவறாமல் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் உண்மையே இல்லை. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகும் கூடும், குழந்தைகளின் அழகும் கூடும். குழந்தைகளின் அழகு கூடுவதைப் பார்த்து தாய்மார்கள் இன்னும் அழகாக மாறிவிடுவீர்கள். பெரும்பாலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தான். எனவே, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பகப் புற்றுநோய் எனும் கொடுமையான நோயிலிருந்தும் தப்பிக்க முடியும்" இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:சாதி பாகுபாட்டால் இசைப்பள்ளி ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு? கரூரில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details