தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயக்குநர் வசந்த பாலனின் "தலைமைச் செயலகம்" புதிய சீரியஸின் டிரெய்லர் வெளியீடு.. - Thalaimai Seyalagam Trailer - THALAIMAI SEYALAGAM TRAILER

Actress keerthy Suresh Released Thalaimai Seyalagam Trailer: இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய "தலைமைச் செயலகம்" சீரியஸின் ட்ரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார்.

தலைமைச் செயலகம் சீரியஸின் புகைப்படம்
தலைமைச் செயலகம் சீரியஸின் புகைப்படம் (credits to ZEE5 "X" page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 6:54 PM IST

சென்னை:தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வசந்தபாலன். இவரது படங்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கையை ஆவணமாகச் சித்தரிப்பவையாகும். இவரது படங்களான வெயில், அங்காடித்தெரு, காவியத் தலைவன், அநீதி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

தற்போது முதல்முறையாகத் தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ள வெப் சீரிஸ் தலைமைச் செயலகம். இதில் நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 ஆகியவை இணைந்து, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது.

இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியா வொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட பொலிடிகல் சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப் பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார். இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில் உள்ள, சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்களில் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார்.

இந்த கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட,மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.பத பதவைக்கும் சஸ்பென்ஸ், சூழ்ச்சி மற்றும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் இந்த வெப் சீரிஸின் ட்ரைலரை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார்.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் முதல் சவுக்கு சங்கர் வரை.. இயக்குநர் அமீர் பிரத்யேக பதில்கள்! - Ameer About Savukku Shankar

ABOUT THE AUTHOR

...view details