தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயின் அரசியல் வருகை குறித்து ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் சொன்னது இதுதான்! - RAJINI BROTHER TALK ABOUT VIJAY

நடிகர் விஜயால் தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது எனவும், கட்சி தொடங்கி எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த்-ன் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயண ராவ்
விஜய், நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயண ராவ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 11:42 AM IST

மதுரை:நடிகர் விஜயால் தமிழகத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது எனவும், கட்சி தொடங்கி எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த்-ன் சகோதரர் சத்திய நாராயண ராவ் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி பாலதம்புராஜ் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் மதுரை வந்திருந்தார். இதையடுத்து அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய நாராயண ராவ், "மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தேன். தரிசனம் சிறப்பாக இருந்தது. ரசிகர் ஒருவர் ரஜினிக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருவதாக செய்தி வந்துள்ளது. அது போன்று செய்யக்கூடாது. அது தவறு. ரஜினியை சாமியாக நினைத்து பூஜித்தால் சாமியே அவருக்கு நல்லது செய்யட்டும்.

விஜய் அரசியலுக்கு வரட்டும். கமலஹாசன் முயற்சி செய்தது போல விஜயும் முயற்சி செய்யட்டும். கட்சி தொடங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. கட்சி தொடங்க விஜய் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், கட்சி தொடங்கி எந்த பிரயோஜனமும் இல்லை, ஒன்றும் சாதிக்க முடியாது. அரசியலுக்கு வந்திருக்கிறார் முயற்சி செய்யட்டும், தாமும் அரசியலுக்கு வர வேண்டுமென மனதில் நினைத்து ஆசைப்பட்டு வந்திருக்கிறார். இனி என்ன செய்வார் என்று தெரியவில்லை.

இதையும் படிங்க: "தவெக 'பி' டீமாக தெரியவில்லை" - ஜி.கே.வாசன் கருத்து!

நடிகர் விஜயகாந்தை ஏற்றுக்கொண்டது போன்று விஜயை ஏற்றுக்கொள்வார்களா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. வீண் சிரமம் அவருக்கு ஏற்படக்கூடும். ஆகவே அரசியலில் இருந்து அவரை பின்வாங்கும்படி செய்தியாளர்கள்தான் அவரிடம் சொல்ல வேண்டும்.

விஜய் சொல்வது போல ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதும் ஒரு முயற்சிதான். ஆனால் அதன் காரணமாக வெற்றி பெற முடியாது கஷ்டம். தற்போது வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ஆகையால் அது போன்ற கேள்விகளை இனிமேல் தவிர்த்து விடுங்கள்," எனத் தெரிவித்தார்.

ஈடிவி தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details