தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கேளிக்கை வரி மறுபரிசீலனை'.. மேடையில் கமல் வைத்த வேண்டுகோள்.. உறுதியளித்த உதயநிதி! - UDHAYANIDHI STALIN

கேளிக்கை வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் கமலஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீடியா மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு -2025
மீடியா மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு -2025 (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2025, 4:31 PM IST

சென்னை:இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக 'மீடியா மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு -2025' சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமா கமல்ஹாசன் பங்கேற்றார்.

மேலும், இந்த மாநாட்டில் தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன், டிஜிட்டல் மீடியா, தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் அதன் சர்வதேச தாக்கங்கள் குறித்த தலைப்பிலும் விவாதங்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வகையில் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்வில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:

நான் இந்த மேடையில் உரையாற்றுவதை மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். இன்று நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் உள்ளோம். தொடர்ந்து தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பம் அழிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய வருவாய் ஈட்டக் கூடியதாக இந்த ஓடிடி தளம் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு இந்த தளத்தை மேலும் வளர்ச்சியடைய செய்யும். நாம் அறிவியலுடன் போட்டி போடவில்லை, அதனுடன் நம்மை இணைத்து பயணித்து வருகிறோம்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரி: பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!

'கலாச்சாரத்தின் தூதர்'

இந்திய சினிமா என்பது இந்தியா கலாச்சாரத்தின் உண்மையான தூதர். இந்திய சினிமாவிற்கு ஒரு நீண்ட எதிர்கால திட்டம் தேவை. தற்போது இருக்கக் கூடிய வியாபாரத்தை கெடுக்காமல் புதிய தொழில்நுட்பங்களை சினிமா துறைக்குள் கொண்டு வர வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தை கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கு ஐடிஐ-களை உருவாக்க வேண்டும். இந்திய சினிமாவிற்கு மிக நீண்ட தொலைநோக்கு பார்வை வேண்டும். சினிமா துறையை மேம்படுத்த வேண்டும். திரைத்துறை வளர்ச்சி என்பது தொழில் நுட்பவியலாளர்களின் திறன் மேம்பாடு மட்டுமே சார்ந்தது. மேலும், ஜிஎஸ்டி வரிக்கு நானும் எதிராகத்தான் இருக்கிறேன். கேளிக்கை வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைக்கிறேன்'' என்றார்.

'துணை நிற்பேன்'

அதனை தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ''பொழுதுபோக்கு ஊடகம் மூலமாக சமூக கருத்துகளை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம். கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தென்னிந்திய திசை வழியையே மாற்றி காட்டியது. சினிமா துறைக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளனர். கேளிக்கை வரியில் இருந்து முழு வரி விலக்கு வேண்டுமென நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். அதன் முக்கியத்துவம் எனக்கு நன்றாக தெரியும். அவரது கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய முறையில் ஆய்வு செய்து சட்ட விதிகளை ஆராய்ந்து சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் அறிவிப்பார். அதற்கு துணை நிற்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details