சென்னை:ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி தம்பதி திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மனைவி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கடந்த செப் 9ம் தேதி ஜெயம் ரவி அறிவித்தார்.
இந்நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இதையும் படிங்க:“சிறு பிள்ளைகள் கர்ப்பிணி ஆவதற்கு இதுதான் காரணம்!”- சீமான் பரபரப்பு பேட்டி
இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்பநல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையான பிரச்னை தொடர்பாக குடும்பநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச இருவருக்கும் உத்தரவிட்டார். அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும், இருதரப்பும் இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சு நடத்தவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.