தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களில் வெல்லும்' - ஏ.சி.சண்முகம் நம்பிக்கை

A.C. Shanmugam: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில், 30 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெறும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

A. C Shanmugam
A. C Shanmugam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 10:25 AM IST

ஏசி சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பு

ஈரோடு:2024நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது, உள்ளிட்ட பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் செய்து வருகின்றன.

அந்த வகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA Alliance) இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சியும், தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, புதிய நீதிக்கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (மார்ச் 11) நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி.சண்முகம் கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரை எங்களை அழைத்துள்ளனர். கூடிய விரைவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். பிரதமர் அடிக்கடி தமிழகம் வருகிறார் எனக் கூறிவருகின்றனர், இது திமுகவிற்கு எரிச்சலையும். தோல்வி பயத்தைக் காட்டுகிறது.

திராவிட இயக்கங்களுக்கு இணையாக பாஜக வளர்ந்துள்ளது. தொகுதிப் பங்கீடு முடிவுற்றதும், அடுத்தகட்ட பணிகளுக்கு இக்கூட்டணி ஆயத்தமாகி வருகிறது. இந்தியா கூட்டணியின் கட்சியினர் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்கவில்லை, அவர்களால் அறிவிக்கவும் முடியாது. ஏனென்றால், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

தொடர்பாக இன்று மாலை தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் அழைத்துள்ளார்கள். தமிழகத்தின் திராவிட இயக்கத்திற்கு சமமாகவும், அவைகளுக்கு மாற்று சக்தியாகவும் பாஜக வளர்ந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவுள்ளது.

இந்த முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் 30 இடங்களில் வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணியினர் இதுவரை வேட்பாளர் அறிவிக்கவில்லை; அறிவிக்க முடியாது. ஷேக் அப்துல்லா மற்றும் மம்தா ஆகியோர் தனியாக களம் காண இருக்கிறார்கள். எனவே, இந்தியா கூட்டணி என்பது ஒரு குழப்பமான கூட்டணி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"பாஜகவுடன் கூட்டணி உறுதி.. அணிலைப் போல் உதவிகரமாக இருப்போம்" - டிடிவி தினகரன் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details