சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2 ஆயிரத்து 877 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியாளர்கள் மற்றும் 537 தொழில்நுட்ப பணியாளர்கள் காலி இடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TNSTC-இல் 2,500க்கும் அதிகமான பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2 ஆயிரத்து 877 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது.
TNSTC (Credits - ETV Bharat Tamil Nadu)
Published : Oct 30, 2024, 12:00 PM IST
இதில் 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 769 காலி இடங்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2,108 பணியிடங்கள் மற்ற பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 307 டிசிசி 75 தொழில்நுட்பப் பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் அடங்கும்.