சென்னை:தமிழ்ப் புத்தாண்டிற்கு ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடுவது குறித்து ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து முக்கிய பண்டிகைகளின் போது, மக்களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகளில் ஆவின் நிர்வாகம் வாழ்த்துச் செய்தியை அச்சிட்டு வழங்கி வருகிறது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டிற்கு எந்த ஒரு வாழ்த்து செய்தியும் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்படாமல் இருந்தது மக்கள் மத்தியில் பேசுபொருளானது.
இது குறித்து நிர்வாக மேலாண்மை இயக்குநர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.