சென்னை: பால், தயிர், இனிப்பு வகைகள் என பல்வேறு பொருட்களைத் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கில் உள்ள பல லட்சக்கணக்கான நுகர்வோர்களுக்குக் கொண்டு சேர்த்து வருகிறது ஆவின் நிறுவனம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாகத் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ஆவின் நிறுவனம், பல இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது.
அதுமட்டுமின்றி, தற்போது தமிழ்நாட்டில் பெரியளவில் கொண்டாடப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய சலுகை விலைகளில் (காம்போ ஆஃபர்) இனிப்பு, கார வகைகள் விற்பனையை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த சிறப்பு சலுகைகளைப் பயன்படுத்தி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை குதூகலமாகக் கொண்டாடுங்கள் எனவும் ஆவின் நிர்வாகம் தமது வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.