சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து கூறிவருவதாக அவர் மீது விசிகவினர் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா மேடையில் பேசிய போது, ஆட்சியலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என கேட்டால் என்ன தவறு? தமிழகத்தில் மன்னராட்சி நடந்து வருகிறது. பிறப்பால் அதிகாரத்தை பெறுகின்றனர் என ஆளுங்கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினார்.
இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. இதனையடுத்து, விசிகவின் உயர்மட்டக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்வதென முடிவெடுக்கப்பட்டதாக நேற்று (டிசம்பர் 9) விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து இன்று (டிசம்பர் 10) சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது திருமாவளவனிடம் செய்தியாளர்கள், ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “கட்சியில் நன்கு ஆலோசித்த பிறகு தான் ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்தோம்.