தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்.. தற்கொலைக்கு முயன்ற காதலி.. திண்டுக்கல்லில் நடந்தது என்ன? - Young Women Suicide Attempt

Young Women Suicide Attempt: திண்டுக்கல் மாவட்டத்தில் காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலன் வீட்டு முன்பு காதலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட காதலன் அருண்குமார்
குற்றம்சாட்டப்பட்ட காதலன் அருண்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 3:38 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி இளம்பெண் ஒருவர், சென்னையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அந்த பெண்ணின் ஊரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அருண்குமார் (29) என்பவரும் அந்த இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் சென்னையில் பணியாற்றி வருவதால், சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வந்தனர். இதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் வெளியிட்ட வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த விஷயம் அருண்குமாரின் பெற்றோருக்கு தெரியவே அருண்குமாரின் உறவினர் ஒருவர் அருண்குமாரையும் அந்த பெண்ணையும் அழைத்து '' உங்களுக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் சம்மதித்து விட்டார்கள்'' என பொய் சொல்லி அந்த பெண்ணை கருக்கலைப்பு செய்ய தூண்டியுள்ளார். மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின்னர், அருண்குமார் மற்றும் அந்த பெண் இருவரையும் அருண்குமாரின் தந்தை முருகன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், அருண்குமாருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த அந்த இளம்பெண், அருண்குமாரிடம் கேட்டபோது, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் புதன்கிழமை இரவு காதலன் அருண்குமார் வீட்டு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவல் அறிந்த அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்கொலை தடுப்பு உதவி எண்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு அல்ல. ஆகவே, சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா உதவி எண் 044-24640050-க்கு அழையுங்கள். இணைய வழித் தொடர்புக்கு 022-25521111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை.. முன்விரோதம் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details