வேலூர்:வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதையின் மூன்றாவது வளைவில் ஆந்திராவில் இருந்து வேலூருக்கு நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் ரஃபிக் மற்றும் கிளீனர் சீனு இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு போலீசார் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.