சென்னை : தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(50). இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் சென்னை வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கர் நகர் மூன்றாவது தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கார்த்திகேயன் தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இவரது மனைவி பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து கார்த்திகேயனும் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டில் இரவு கார்த்திகேயன் மட்டும் தனியாக தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த இவரது மனைவி கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்காததால், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது கார்த்திகேயன் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க :தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. திடுக்கிட வைத்த கொலையாளியின் வாக்குமூலம்!