தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சொகுசு கார் மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி.. ஓட்டுநர் தப்பியோட்டம் - TV CAMERAMAN KILLED IN ACCIDENT

சென்னை மதுரவாயல் அருகே சொகுசு கார் மோதிய விபத்தில் தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு கார் மோதியதில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி
விபத்தில் உயிரிழந்த பிரதீப் குமார் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 6:27 PM IST

சென்னை: சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (39). இவர் தனியார் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். மேலும், இவர் பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், அவர் நேற்று (நவ.19) நள்ளிரவு 2 மணி அளவில் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னே வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தில் இடித்துள்ளது.

இதில் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு புதரில் விழுந்த பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தால், சொகுசு காரின் சென்சார் அமைப்புகள் துண்டிக்கப்பட்டதால் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் தானாக நின்றதாகவும், இதனை அடுத்து அந்த சொகுசு காரை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஓசூர் பயங்கரம்.. அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கறிஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஒரு மணிநேர தேடலுக்குப் பின்னர் பிரதீப் குமாரின் சடலத்தை மீட்டுள்ளனர். இத்தகைய நிலையில், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சொகுசு கார் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாது, அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் ஓட்டுநர் முரளி என்பதும், அவர் விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு திரும்பும்போது விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளதாகவும், இந்த விபத்தை ஏற்படுத்திய முரளி தற்போது தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருவதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details