சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் ஷ்ரவன் குமார் ரெட்டி. இவர் கடந்த 4ஆம் தேதி அன்று சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் உள்ள வீடு ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவுடன் சேர்ந்து சோதனை நடத்தியுள்ளார். அப்போது அந்த வீட்டில் சட்டவிரோதமாக 2000 போலி ரூபாய் தாள்களை கேரளாவை சேர்ந்த ரஷீத் அழிக்கோடன் தேகத் என்பவர் வைத்திருந்துள்ளார்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஷ்ரவன் குமார் ரெட்டி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ரஷீத் அழிக்கோடன் தேகத் (41) என்பவரிடமிருந்து 9.48 கோடி 2000 ரூபாய் போலி தாள்களை பறிமுதல் செய்தனர்.