சென்னை : சென்னை, பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவரும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த 3 மாதங்களுக்கு பின்னர், சதீஷ்குமார் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், கூட வேலைப் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அப்பெண்ணை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :வடபழனியில் ஆந்திர இளைஞரை கடத்திய மர்ம கும்பல்..2 பேரை கைது செய்து போலீசார் அதிரடி!