சென்னை:கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நிகழ்ந்துள்ள கள்ளச்சாராய சம்பவம், ஈவிரக்கமின்றி இதுவரை 56 பேரின் உயிரை குடித்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் கள்ளக்குறிச்சி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பெருந்துயர் சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் உயிரையும் பலி கொண்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
ஜிஜேந்தர் என்ற 36 வயதான அந்த வாலிபர், உத்தரப் பிரதேச மாநிலம் ஓரை பகுதியைச் சேர்ந்தவர். பிழைப்புத் தேடி இரண்டு வருடங்களுக்கு முன் கள்ளக்குறிச்சிக்கு வந்தவர், எம்.ஆர்.நகரில் தங்கி. சோனு என்பவரிடம் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி , விடுமுறை எடுத்த ஜிஜேந்தர், தனது முதலாளி சோனுவிடம் 200 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கருணாபுரம் சென்றுள்ளார். அங்கு கள்ளச்சாராயம் குடித்தவர், வயிற்று வலியால் துடிக்கவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஐஸ் வியாபாரம் செய்துவரும் ஜிஜேந்தரின் நண்பர் சல்மான், ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறும்போது, "நான் கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் இன்று வசித்து வருகிறேன். ஜிஜேந்தர் எனது நண்பர். எம்.ஆர்.நகரில் தங்கி, சோனு என்பவரிடம் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். அவ்வபோது கருணாபுரத்துக்கு வந்து அவரது வழக்கம்.