சென்னை:சென்னை வளசரவாக்கம் கைக்கான் குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாரதி (38). இவர் தனியார் பள்ளி ஒன்றில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். தற்போது சொந்தமாக வீடு கட்டிவரும் அவர், கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் ரூபாய் மூன்று லட்சம் எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்புறத்தில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர் பாரதியிடம் '' 'கீழே 50 ரூபாய் கிடக்கிறது, அது உங்கள் பணம்தானா' என கேட்க, அதற்கு தன்னுடைய பணம் இல்லை என பாரதி மறுத்துள்ளார்.
பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து தனது வண்டியின் முன்பக்கத்தை கவனித்தபோது அதிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்தை காணவில்லை என்பதை பாரதி உணர்ந்துள்ளார்.