தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் மருத்துவருக்கு ஆபாசப் புகைப்படங்கள் அனுப்பிய ஆண் மருத்துவர் கைது! - Doctor arrested in Chennai - DOCTOR ARRESTED IN CHENNAI

Woman Doctor Photo issue: சென்னையில் தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசப் புகைப்படங்களை அனுப்பிய மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 5:20 PM IST

சென்னை: சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் சென்னையில் பணியாற்றும் ஒரு மருத்துவர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பெண் மருத்துவரின் கணவரின் இன்ஸ்டாகிராமுக்கு ஆபாச வார்த்தைகள் மற்றும் ஒரு ஆண் நபரின் நிர்வாணப்படம் வந்துள்ளது.

இதானல் அதிர்ச்சி அடைந்த பெண் மருத்துவரின் கணவர், அந்த ஐடியை பிளாக் செய்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை அனுப்பியதுடன், அவதூறான வார்த்தைகளைப் பேசி ஆடியோவும் அனுப்பியுள்ளார்.

அந்த ஆடியோவில் பெண் மருத்துவர் பற்றி தவறாகப் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதேபோல் பெண் மருத்துவரின் எண்ணுக்கும் அந்த நபர் ஆபாசப் படங்களை அனுப்பியுள்ளார். பின்னர், இது தொடர்பாக பெண் மருத்துவரின் கணவர் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தியதில், பெண் மருத்துவருடன் ஒன்றாக படித்த நபர்தான் இந்த வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் பேரில், திருவள்ளூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் கடலூரைச் சேர்ந்த 27 வயது மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:நடிகை அளித்த பாலியல் புகார்.. நடிகரும், எம்.எல்.ஏவுமான முகேஷ் மீது வழக்கு.. கேரளாவில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details