திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள பிரியாணி ஹோட்டல் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடியாத்தம், சந்தப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவர், தனது மூன்று குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலை சுற்றுலா சென்ற போது ஆம்பூரில் நிறுத்தி, பிரபல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த சதீஷ், இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் நூருத்தீனிடம் கேட்டபோது, அவரும் மற்றும் பணியாளர்களும் சரிவர பதிலளிக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஹோட்டல் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:பள்ளி மாணவர்களிடம் புழங்கும் கூல் லிப் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு