திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பசுமை நகர்ப் பகுதியில் சட்ட விரோதமாகக் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பணம் பறித்து வந்ததாக மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணைய இயக்குநர் கண்ணகிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பெயரில் மருத்துவ குழுவினர் பசுமை நகருக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பத்தூர் அடுத்த ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(29) மற்றும் அவருடைய மனைவி கங்கா கௌரி(27) ஆகிய இருவரும் பசுமை நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் திருப்பத்தூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்து வரும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா எனப் பரிசோதித்து அவர்களிடம் பணம் வசூலித்து வந்ததும் தெரிய வந்தது.