விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், சாத்தூர் அடுத்த சடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர், தனது வகுப்பில் படிக்கும் தன்னுடைய மாணவியின் அம்மா செல்போனுக்கு ஆபாச வீடியோ மற்றும் போட்டோவை அனுப்பி நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாணவியின் அம்மாவின் செல்போனை உறவினர் ஒருவர் பார்த்தபோது, அதில் இருந்த நிறைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தது குறித்து கேட்டு உள்ளார். அதற்கு அவர், தன்னுடைய செல்போனை மகள்தான் அதிக அளவில் பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
பின்னர், அந்த மாணவியிடம் அந்த வீடியோ மற்றும் ஆபாச படம் குறித்து கேட்டதற்கு, தன்னுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக ஆபாச வீடியோ மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து ஆசிரியர் தங்கபாண்டியன் மீது மாணவியின் அம்மா சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தர்.
மேலும், அப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சாத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், புகாரில் உண்மைத்தன்மை இருந்ததை அடுத்து ஆசிரியர் தங்கபாண்டியினை POCSO சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:மத்தியப் பிரதேசத்தில் கொலை; சென்னையில் கட்டட வேலை - போலீசுக்கு தண்ணிகாட்டியவர்கள் சிக்கியது எப்படி?