சென்னை: சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு (மார்ச்.31) வெளிநாட்டு இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு சட்டை இல்லாமல் சாலையின் நடுவே ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்டு, அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் அந்த நபரை ஓரமாகச் செல்லுமாறு கூறி உள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த வெளிநாட்டு இளைஞர் வாகன ஓட்டிகளைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க முயன்றனர்.