தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எஸ்.வேல்மயில் (34) - பி. பேபி (36). மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு, கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வேல்மயில் பெட்ரோல் பங்க் நிலையத்திலும், பேபி ஒரு மதிய உணவு மையத்தில் அமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தற்போது வேல்மயிலின் பெற்றோருடன் தூத்துக்குடியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என விரும்பியுள்ளனர். இதற்காக தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு வளர்ச்சி மையத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு பதிவு செய்துள்ளனர்.
பதிவிற்குப் பின்பு, ஒரு சமூகப் பணியாளர் அவர்களின் இல்லத்திற்குச் சென்று குழந்தை வளர்ப்பதற்கான பரிசோதனை (Home Study) செய்து குழந்தை வளர்ப்பதற்கு தகுதி உடையவர்கள் என சான்றிதழ் அளித்துள்ளார். இருப்பினும், சில காரணங்களால் வேல்மயில் தம்பதியால் குழந்தையைத் தத்தெடுக்க முடியாமல் போனது.