தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு! - WATER TANK

பொள்ளாச்சி அருகே 6 அடி உயர தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தண்ணீர் தொட்டி, உயிரிழந்த சிறுமி
தண்ணீர் தொட்டி, உயிரிழந்த சிறுமி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 7:51 PM IST

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மே கவுண்டனூர் கிராமத்தில் கார்த்திக் - சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நைநிதா(3) என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இக்குழந்தை வீட்டின் பின்புறம் உள்ள வராண்டாவில் இன்று(நவ 4) காலை 10 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த 6 உயர தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக குழந்தை விழுந்துள்ளது. இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடியபோது, குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் உடனடியாக குழந்தையின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க :நெல்லை நீட் அகாடமி விவகாரம்: மாவட்ட ஆட்சியர் 6 வாரங்களில் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜதுரை தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details