தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாட்டர் டேங்க் மீது பெண் தோழியுடன் வீடியோ கால்.. தவறி விழுந்த சிறுவன் பலி.. சென்னையில் நடந்தது என்ன? - chennai school boy death - CHENNAI SCHOOL BOY DEATH

school boy fell from the floor and died: சென்னையில் பெண் தோழியுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் கால் இடறி நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் உயிரிழந்த இடம்
சிறுவன் உயிரிழந்த இடம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 12:31 PM IST

சென்னை: சென்னை வடபழனி தங்கவேல் காலனி வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி. இவரது 13 வயது மகன் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் நேற்று தனது நண்பரான கார்த்திகேயன் என்பவரோடு சேர்ந்து படிப்பதற்காக வடபழனி அழகிரிநாதர் முதல் தெருவில் உள்ள பிளாசா மேனர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று மதியம் மூன்று மணி அளவில் சிறுவன் நான்காவது மாடியில் உள்ள வாட்டர் டேங்க் மீது ஏறி தனது பெண் தோழிக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார். அப்போது தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார் என வீடியோ கால் செய்து கட்டடத்தின் விளிம்பில் நின்றபடி பேசிய நிலையில் சிறுவன் நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடபழனி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ். ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சிசிடிவி கட்சிகள் ஏதாவது உள்ளதா என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் இளைஞரை துரத்திச் சென்று கொன்ற யானை.. இணையத்தில் பரவும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details