தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டு மாடை வேட்டையாடிய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு! - WILD COW POACHING CASE

Wild Cow Poaching case: தேனி மாவட்டத்தில் காட்டு மாடை வேட்டையாடிய வழக்கில் வனத்துறையினர் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காட்டு மாடை வேட்டையாடிய வழக்கில் 8 பேர் கைது
காட்டு மாடை வேட்டையாடிய வழக்கில் 8 பேர் கைது (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2025, 12:30 PM IST

தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட புலியோடை பகுதியில், காட்டு மாடு ஒன்று இறந்து கிடப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் காட்டுமாடு வேட்டையாடப்பட்டு, உடல் பாகங்கள் தனித்தனியே வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் காட்டு மாட்டை வேட்டையாடியதாக பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், பிரபாகரன், வேல்முருகன், ஆண்டவர், சுரேஷ், சுந்தரம், ராஜபாண்டி, முகமது யூனிடஸ் ஆகிய எட்டு நபர்களையும் காட்டு மாடு வேட்டையாடிய வழக்கில் வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுனர்.

இதையும் படிங்க: 'சீமான் நல்ல எண்டர்டெய்னர்... நானும் ரசிப்பேன்' - பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்! - SEEMAN

இந்த விசாரணைக்கு பின் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வழக்கு பதிவு செய்து, பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தினர். காட்டு மாடு வேட்டையாடிய 8 நபர்களையும், 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப் படி 8 நபர்களையும் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details