சென்னை:நிர்வாக பிரச்னைகள் காரணமாக இன்று (நவ.19) சென்னையில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் என மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் திடீரென ரத்து செயப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த விமானங்களில் பயணிப்பதற்காக முன் பதிவு செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று மட்டும் சிங்கப்பூர், டாக்கா, இலங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னை விமானநிலையத்துக்கு வரவேண்டிய 4 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, டாக்கா புறப்பட வேண்டிய 4 விமானங்கள் மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்டுள்ள புறப்பாடு விமானங்கள்:
வழித்தடம்
நேரம்
விமானம்
சென்னை - சிங்கப்பூர்
அதிகாலை 2.50
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்,
சென்னை - இலங்கை
காலை 11.25
ஏர் இந்தியா விமானம்
சென்னை - டாக்கா
பகல் 1.55
பி.எஸ்.பங்களா ஏர்லைன்ஸ் விமானம்
சென்னை - இலங்கை
மாலை 3.25
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
நிர்வாக பிரச்னைகள் காரணமாக இந்த சர்வதேச விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், முறையான முன்னறிவிப்பின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த விமானத்துக்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் தங்களது உறவினர்கள், நண்பர்களை வரவேற்க காத்திருந்தவர்கள் அவதிக்குள்ளாயினர். பயணிகளை தொடர்பு கொண்டு எப்போது எந்தவிமானத்தில் அவர்கள் வருகின்றனர் என்ற விவரங்களை பெற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)