சென்னை: சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்டை விடுத்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் கனமழை மற்றும் சூறைக்காற்று போன்றவற்றால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலைய உயர் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பி வரும் வானிலை அறிக்கைகளின் அடிப்படையில், விமான சேவைகளைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னையில் இருந்து பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் செல்லும் 4 விமானங்களும், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்து கொழும்பு மற்றும் விசாகப்பட்டினத்துக்கு புறப்பட வேண்டிய இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.