சென்னை:ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது22). இவர் இன்று காலை சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் ஆதிகேசவன் என்ற இருவர், மணிகண்டனிடம் செல்போன் கேட்டு தகராறு செய்துள்ளதாகவும் அவர் செல்போன் தர மறுத்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மணிகண்டனைக் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதன் பின்னர் மணிகண்டன் தனது நண்பர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது 7 நண்பர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று வெங்கடேசனைச் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.