சென்னை:தமிழக அமைச்சரவை 5 ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டதுடன், துணை முதல்வர் பொறுப்பும் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் துணை முதலைமைச்சராக உதயநிதி ஸ்டாலினும் அமைச்சர்களாக புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆவடி நாசர், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு ஏற்க்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து நேற்றைய தினம் புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அப்போது புதிய அமைச்சர்கள் பொறுப்பு ஏற்க வசதியாக செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதில் ராமசந்திரன் அரசு தலைமை கொறடா பொறுப்பு வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குதுறையும்,
கோவி செழியனுக்கு உயர்கல்வி துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டது.